அம்பாறை மாவட்டம், கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த RS அதிசொகுசு பேருந்து மீது, நேற்றிரவு (11) மருதமுனை – நீலாவணை பகுதியில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதுடன், பேருந்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பயணிகள் போக்குவரத்துத் துறையில் நிலவும் வியாபாரப் போட்டி காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும், தாக்குதலின் பின்னணி தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை.







