ருவன்வெலிசாய விகாரைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (12) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அநுராதபுர புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் நேற்று (11) இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் உணவு மற்றும் நீர் எதனையும் உட்கொள்ளாமல் தமது எதிர்ப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று இரவும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த பல தேரர்களும் பொதுமக்களும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்துள்ளனர்.







