Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வரவு செலவு திட்டத்தை வைத்து ஜனாதிபதி மாயாஜாலம் காட்டுகிறார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

வரவு செலவு திட்டத்தை வைத்து ஜனாதிபதி மாயாஜாலம் காட்டுகிறார்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

7 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் வகையில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமையவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வியாழக்கிழமை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஜனாதிபதி நீண்ட உரையொன்றை நிகழ்த்தி பல்வேறு திட்டங்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளார். எனினும், அவற்றில் பல கடந்த 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போதைய வரவு செலவுத் திட்டத்திலும் அதே நிலைமை தொடர்வதாக அவர் விமர்சித்தார்.

மேலும், வறுமை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மக்களின் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் உரையாற்றும் ஜனாதிபதி, அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் வெறும் மாயாஜாலமாகவே காணப்படுவதாகக் குறிப்பிட்ட சஜித் பிரேமதாச, இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமக்குக் கிடைத்துள்ள நன்மைகள் என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
செய்திகள்

யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

November 13, 2026
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!
உலக செய்திகள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!

November 13, 2026
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு!
செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு!

November 13, 2026
ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

November 13, 2026
லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

November 13, 2026
மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

November 13, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு