Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!

2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!

16 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தங்களது தொழில்சார் கோரிக்கைகள் மற்றும் களப்பணிகளுக்கான கொடுப்பனவுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, நாட்டின் பல்வேறு அரச சேவைத் தொழிற்சங்கங்கள் இன்று (16) முதல் பணிப்புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

இதன்படி, நாடளாவிய ரீதியில் பணியாற்றும் 450க்கும் மேற்பட்ட நீர்ப்பாசனத் திணைக்கள தொழில்நுட்ப உதவியாளர்கள், தங்களது சொந்தப் பணத்தைச் செலவிட்டு எரிபொருள் மற்றும் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை தொடர்வதாகத் தெரிவித்து, நேற்று (15) நள்ளிரவு முதல் இரண்டு நாள் சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு இரண்டு நாட்களுக்குள் அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக நீர்ப்பாசன தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் சமன் துஷார வைத்தியரத்ன எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்தகால அனர்த்தங்களின் போது முன்வைக்கப்பட்ட நான்கு முக்கிய கோரிக்கைகளை கடந்த 5ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக்கொண்டு உறுதியளித்த போதிலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதன் எதிரொலியாக, தமது கோரிக்கைகள் வரவு-செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை முதல் அனைத்து அனர்த்த நிவாரணப் பணிகளிலிருந்தும் விலகி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக 2024ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள களப்பணிக் கொடுப்பனவை மீண்டும் வழங்குமாறு கோரி, அரச சேவைப் பொறியியலாளர் சங்கமும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதற்கமைய, பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் சம்பள அதிகரிப்பைக் கோரி முன்னெடுக்கப்படுவதல்ல என்றும், களப்பணிகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் தமது சொந்தப் பணத்தில் மேற்கொள்ளும் மேலதிக செலவுகளை ஈடுசெய்வதற்கான கொடுப்பனவை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு பல்வேறு அரச சேவைத் தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், அரச சேவைகளின் வழக்கமான செயற்பாடுகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!
செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!

November 16, 2026
இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!
செய்திகள்

இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!

November 16, 2026
2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!

November 16, 2026
கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!

November 16, 2026
இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்
செய்திகள்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

November 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.