Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழந்த விவகாரம்; பதிவுகளை மாற்ற ஓஐசி முயற்சித்தது அம்பலம்

24 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொய்யான தகவல்களைப் பதிவு செய்து உத்தியோகபூர்வ ஆவணங்களை மாற்றுமாறு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்கு கீழ் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் வெளிகொணரப்பட்டுள்ளது.

இஷார ஹர்ஷ குமாரவின் மரணம் தொடர்பில் கடந்த 12ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்பகட்ட சாட்சி விசாரணையின்போது, தற்போது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் சார்ஜன் தர அதிகாரி மதுஷங்க, திறந்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்த போது, உயிரிழந்த நபர் கைது செய்யப்பட்ட தினம் மற்றும் நேரத்தை மாற்றி உத்தியோகபூர்வ பதிவேடுகளில் பதிவு செய்யுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தன்னிடம் கடுமையாகக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பொய்யான தினம் மற்றும் நேரம்

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இஷார ஹர்ஷ குமாரவின் மரணத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ரஜித குருசிங்கவும் தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்ட திகதி மற்றும் நேரம் தொடர்பான சரியான விபரங்களை மாற்றுவதற்கு தான் விரும்பவில்லை எனவும், அந்த சட்டவிரோத உத்தரவுக்கு இணங்க மறுத்த காரணத்தினால் தான் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் பொலிஸ் சார்ஜன்ட் திறந்த நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

ஆனால், பொலிஸ் உள்விசாரணையின்போது, குறித்த சார்ஜன்ட் அதிகாரி அந்த நேரத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட கடமையான, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்படும் சந்தேகநபர்களின் விபரங்களை முறையாக உத்தியோகபூர்வ ஆவணங்களில் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்திருந்தது.

இஷார ஹர்ஷ குமார மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட வருண மதுஷங்க உள்ளிட்ட மேலும் இருவர் தொடர்பான தகவல்களும் பொலிஸ் உத்தியோகபூர்வ பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்பதுவும் பொலிஸ் உள்விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

எவ்வாறாயினும், மதுஷங்க என்ற அந்த அதிகாரி நீதவான் முன்னிலையில் சாட்சியமளிக்கையில், இஷார ஹர்ஷ குமார மற்றும் வருண மதுஷங்க ஆகிய இருவரையும் உப பொலிஸ் பரிசோதகர் குருசிங்க உள்ளிட்ட அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில், தன்னையும் தூற்றியவாறு சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவுக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இஷார ஹர்ஷ குமாரவுக்கு கடுமையாக தாக்கி அவர் சிறைக்குள் விழுந்து கிடந்தபோது, தான் இரண்டு தடவைகள் அங்கு சென்று அவரை பார்த்துவிட்டு, அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிய போதிலும், எவரும் அது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்றும் அவர் தனது சாட்சியத்தின் போது தெரிவித்துள்ளார்.

12ஆம் திகதி நடைபெற்ற ஆரம்பகட்ட சாட்சி விசாரணையின் முற்பகல் வேளையில் இடம்பெற்ற பிரதான சந்தேகநபரை அடையாளம் காணும் அணிவகுப்பின்போது, பொலிஸ் தாக்குதலுக்குப் பின்னர் வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வருண மதுஷங்க மற்றும் ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு பேரினால் பிரதான சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் ரஜித குருசிங்கவை இலகுவாக அடையாளம் காண முடிந்துள்ளது.

மேலும் பொலிஸாரால் இதற்கு முன்னர் உப பொலிஸ் பரிசோதகர் குருசிங்கவுக்கு எதிராக தாக்குதல் குற்றச்சாட்டுக்காக மாத்திரம் முன்வைக்கப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையை திருத்தி அதில் கொலைக் குற்றச்சாட்டையும் சேர்க்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமையானது, பொலிஸ் விசாரணைகள் மிகவும் மந்தகதியிலும், சந்தேகநபர்களை முறையாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் தவறியுள்ளதாகவும் தெரிவித்து நீதவான் பொலிஸாரை கண்டித்த சந்தர்ப்பத்தின் போதே ஆகும்

மனநோயாளி?

கொலை மற்றும் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ரஜித குருசிங்க மனநல பாதிப்பால் அவதிப்படுபவராக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால், அவரை மனநல வைத்தியர் ஒருவரிடம் முற்படுத்துவதற்கு உத்தரவிடுமாறு ஹோமாகம பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நீதவானினால் ஏற்கொள்ளப்பட்டிருந்தது.

அன்றைய தினம் பிற்பகல் நடைபெற்ற சாட்சி விசாரணையின்போது தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சம்பவத்தை நேரில் கண்ட முக்கிய சாட்சியான வருண மதுஷங்கவை நீதவானின் உத்தியோகபூர்வ அறைக்கு அழைக்கப்பட்டு சாட்சியம் பெறப்பட்டிருந்தது. அந்தச் சாட்சியத்தை தொடர்ந்து சந்தேகநபரான ரஜித குருசிங்கவின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பத்துடன் தொடர்புடைய சட்ட மருத்துவ அறிக்கைகளை எதிர்வரும் 19ஆம் திகதி கட்டாயம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஹோமாகம நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மரணம் மற்றும் தாக்குதலை நேரில் கண்ட முக்கிய சாட்சியாளரான, தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வருண மதுஷங்கவின் உயிரை பாதுகாத்துத் தருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் குற்றச் செயல்களின் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களிடம் பல சந்தர்ப்பங்களில் வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அவரது தாயாரான சுஜாதா ஹெட்டியாச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?
செய்திகள்

உலக அதிசய பட்டியலில் தஞ்சை பெரிய கோவில்?

November 17, 2026
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை
செய்திகள்

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

November 17, 2026
பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 17, 2026
மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாவட்ட பிரதேச செயலாளர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனாவிடம் பெண் ஒருவர் முறைப்பாடு

November 17, 2026
லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!
செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

November 17, 2026
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!
செய்திகள்

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

November 17, 2026
Next Post
கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

கஸ்ஸப தேரர் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.