Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

12 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் இருவர் நேற்று (17) செவ்வாய்க்கிழமை டெல்லியில் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்து, ஐந்து முக்கிய கடல்சார் மற்றும் நீர்வழித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 9,618 கோடி இந்திய ரூபாய் நிதியுதவி கோரும் மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.

இதில், ராமேஸ்வரம் துறைமுகத்தை மேம்படுத்துவதுடன், ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பதற்காக 118 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.

மேலும், கடலூரில் புதிய ஆழ்கடல் துறைமுகம் அமைத்தல், பக்கிங்ஹாம் கால்வாயைப் புனரமைத்தல், பாம்பன் கால்வாயை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

அத்துடன், சென்னை மெரினா, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடற்கரை நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகளை அமைப்பதற்கும், சென்னை – புதுச்சேரி இடையே பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக பாடசாலைக் கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன், மத்திய கல்வி அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியைச் சந்தித்து, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய கல்வித் திட்டங்களுக்கான நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையிலான படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால், இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பயணிகள் போக்குவரத்து மற்றும் கடல்வழி இணைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026
உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

November 18, 2026
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 18, 2026
மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!

November 18, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு