முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (18) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சுகீஷ்வர பண்டார கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.







