Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தன்னார்வலர்கள் வருகை!

இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தன்னார்வலர்கள் வருகை!

21 minutes ago
in செய்திகள்

இலங்கையின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையைச் (Peace Corps) சேர்ந்த 34 தன்னார்வத் தொண்டர்கள் தமது இரண்டு வருடகால சேவையை இலங்கையில் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கான சேவை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நேற்று முன் தினம் (17) நடைபெற்றதுடன், இதில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்துகொண்டார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

2018ஆம் ஆண்டு இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ள மிகப்பெரிய அமெரிக்க அமைதிப் படைத் தன்னார்வலர் குழு இதுவாகும்.

இவர்கள் இலங்கை ஆசிரியர்களுடன் இணைந்து வகுப்பறைக் கற்பித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களில் ஈடுபடவுள்ளதுடன், மாணவர்களின் ஆங்கில மொழித் தொடர்பாடல் திறனை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்கவுள்ளனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இராஜதந்திர உறவுகள் பேச்சுவார்த்தை மேசைகளில் மட்டுமன்றி, சில நேரங்களில் வகுப்பறைகளிலும் ஆரம்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கைக்கான அமைதிப் படைத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெஃப்ரி கோவியா உள்ளிட்ட குழுவினரின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கல்விசார் ஒத்துழைப்பு, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் மக்களிடையிலான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!
செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!

November 19, 2026
மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!
செய்திகள்

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!

November 19, 2026
உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!
செய்திகள்

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

November 19, 2026
மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!
செய்திகள்

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

November 19, 2026
கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது
செய்திகள்

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

November 19, 2026
கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!
செய்திகள்

கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

November 19, 2026
Next Post
மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு