விவாகரத்துத் தீர்ப்பை விரைவாகப் பெற்றுக்கொடுக்க 65,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட காதி நீதிபதியின் மனைவி, குறித்த காதி நீதிமன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







