மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை காணப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







