Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!

16 minutes ago
in செய்திகள்

இலங்கைக்குக் கடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 71.24 கிலோகிராம் ஹெரோயினை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தனிப்பட்ட ஹெரோயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்றாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளில் சென்னையில் அதிகாரிகள் விசேட கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றையும், அதற்குப் பாதுகாப்பாகப் பயணித்த இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, வெளிர் வெள்ளை நிறத் தூள் அடங்கிய 69 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை ஹெரோயின் போதைப்பொருள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சென்னையைப் போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி ஊடாகக் கரையோரப் பாதையில் குறித்த போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருமளவிலான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 9% ஆக உயர்த்தத் தீர்மானம்!
செய்திகள்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 9% ஆக உயர்த்தத் தீர்மானம்!

November 20, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகளில் மாற்றம்; புதிய திகதிகள் வெளியீடு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுகளில் மாற்றம்; புதிய திகதிகள் வெளியீடு!

November 20, 2026
மாகாணங்களின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

மாகாணங்களின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 20, 2026
பழுதடைந்த வெங்காயம் விற்பனை; சம்மாந்துறையில் வர்த்தகருக்கு 10,000 ரூபா அபராதம்!
செய்திகள்

பழுதடைந்த வெங்காயம் விற்பனை; சம்மாந்துறையில் வர்த்தகருக்கு 10,000 ரூபா அபராதம்!

November 19, 2026
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!

November 19, 2026
காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!
செய்திகள்

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

November 19, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு