Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; எலும்புக்கூடுகளின் மாதிரிகளைப் பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; எலும்புக்கூடுகளின் மாதிரிகளைப் பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதி!

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்தவர்களுடையவை எனக் கருதப்படும் எலும்புக்கூடுகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேராசிரியர் ராஜ் சோமதேவ அண்மையில் சமர்ப்பித்த சுருக்க அறிக்கையின் அடிப்படையில் மாத்திரம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செம்மணி – சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல், நேற்று (19) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மற்றும் அரச தரப்பு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த நான்காவது சுருக்க அறிக்கைக்கு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கும் நான்காவது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, முன்னைய அறிக்கைகளில் செம்மணி பகுதி மனிதப்புதைகுழியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அண்மைய அறிக்கையில் அந்தக் குறிப்பீடு இடம்பெறாமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அத்துடன், இதுவரை 580க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அவற்றை அடையாளம் காண்பதற்கான மரபணுப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் பரிசோதனைகள் சர்வதேச தரத்திலும் மேற்பார்வையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

மேலும், செம்மணி பகுதியில் காணாமலாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூவரின் பெற்றோர், மனித எலும்புக்கூடுகளுடன் ஒப்பீடு செய்வதற்காகத் தங்களது மரபணு மாதிரிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்து சத்தியக்கடதாசிகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அதேவேளை, காபன் காலக்கணிப்பு பரிசோதனைகளுடன் மரபணுப் பரிசோதனைகளையும் இணையாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிவான் எஸ். லெனின்குமார், பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை அவரது அவதானிப்புகள் மற்றும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது எனக் குறிப்பிட்டார்.

எனவே, அந்த அறிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காபன் காலக்கணிப்புக்கு மேலதிகமாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய பரிசோதனை முறைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், காபன் பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடிய நான்கு சர்வதேச நிறுவனங்களின் பெயர்களை முன்வைக்குமாறும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், வயது வந்தவர்களுடையவை எனக் கருதப்படும் எலும்புக்கூடுகளின் என்பு மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த பரிசோதனை நடைபெறும் திகதியை நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன், பரிசோதனையின்போது பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளும் பிரசன்னமாகியிருக்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த நீதிமன்ற அமர்வில் ஆராயப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!
செய்திகள்

ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட ரொட்டும்ப அமில இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்!

November 20, 2026
பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!
செய்திகள்

பிரபாகரனின் இல்லத்திற்குச் சென்ற திருமாவளவன்; தமிழக பா.ஜ.க கடும் கண்டனம்!

November 20, 2026
விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச
செய்திகள்

விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்களை செம்மணியில் புதைத்ததை ஒப்புக்கொண்ட சோமரத்ன ராஜபக்ச

November 20, 2026
மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!
செய்திகள்

மட்டக்களப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பெரும் ஈபிடிபி அல்ல-அவர்கள் ராசிக் குழு!

November 20, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!
உலக செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை; மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

November 20, 2026
செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி முதல் மூன்று அறிக்கைகளிலிருந்து முரண்படும் இறுதிஅறிக்கை

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.