ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலமானது அரசியலமைப்பிற்கு முரணானதல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அறிவித்துள்ளார்.
இன்று (11) பாராளுமன்ற அமர்வில் இதனை அறிவித்த சபாநாயகர், குறித்த சட்டமூலத்தை சில திருத்தங்களுக்கு உட்படுத்தி பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, உயர் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








