மானிப்பாய் பகுதியில் நேற்று நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 69 கிராம் ஐஸ் போதைப்பொருளும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 1 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மீட்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.







