அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடல் பகுதியில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் நீராடிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களும் நீரில் சிக்கிய நிலையில், அவர்களில் ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டு நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், ஏனைய இரு இளைஞர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன இருவரும் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 23 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போன இளைஞர்களைத் தேடும் பணியில் கடற்படையினர், உள்ளூர்வாசிகள் மற்றும் நிந்தவூர் பொலிஸார் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







