Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
4 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய முன்னாள் வரி அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை!

4 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய முன்னாள் வரி அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வர்த்தகர் ஒருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் மதிப்பீட்டாளர் ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், குறித்த நபரின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரின் வருடாந்த வரிப் பொறுப்பைக் குறைத்துக் கணிப்பிடுவதற்காக 4 இலட்சம் ரூபாவை லஞ்சமாகக் கோரி, அதில் 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டதாகப் பிரதிவாதிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

2011ஆம் ஆண்டு அனுராதபுரம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய காலப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா நான்கு ஆண்டுகள் வீதம் 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அந்தத் தண்டனையை நான்கு ஆண்டுகளுக்குள் அனுபவிக்கும் வகையில் ஒரே காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா மற்றும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத் தொகைகளைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 14 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, பிரதிவாதி சுமார் 40 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றியுள்ளதுடன், வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு அவரது சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், பொதுமக்களிடமிருந்து அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாயை நிர்வகிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரி ஒருவர் இவ்வாறு இலஞ்சம் பெற்றுக்கொண்டமை பாரதூரமான குற்றம் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது பொதுச் சேவைக்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் ஆணைக்குழு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனைக் கருத்திற்கொண்ட நீதிபதி, அரச வருமானத்தைச் சேகரிக்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் இத்தகைய முறைகேடுகளைச் சாதாரணமாகக் கருத முடியாது எனத் தெரிவித்து உரிய தண்டனைகளை விதித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவு; காத்தான்குடியில் கோலாகலமாக ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி
செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவு; காத்தான்குடியில் கோலாகலமாக ஆரம்பமான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

November 23, 2026
வெலிகமவில் ரயிலுடன் STF ஜீப் மோதி விபத்து; நான்கு அதிகாரிகள் காயம்!
செய்திகள்

வெலிகமவில் ரயிலுடன் STF ஜீப் மோதி விபத்து; நான்கு அதிகாரிகள் காயம்!

November 23, 2026
பண்டிகைக் காலத்தில் பொலிஸாரின் விசேட சோதனைகள் தீவிரம்; போதையில் வாகனம் செலுத்துவோருக்கு கடும் கண்காணிப்பு!
செய்திகள்

பண்டிகைக் காலத்தில் பொலிஸாரின் விசேட சோதனைகள் தீவிரம்; போதையில் வாகனம் செலுத்துவோருக்கு கடும் கண்காணிப்பு!

November 23, 2026
யாழில் T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் இருவர் கைது!
செய்திகள்

யாழில் T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் இருவர் கைது!

November 23, 2026
ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்; ட்ரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம்; ட்ரம்ப் எச்சரிக்கை!

November 23, 2026
திருகோணமலையில் ரயில் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

திருகோணமலையில் ரயில் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

November 23, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.