Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு; பொலிஸ் பாயிஸை ஐந்து செய்ய சர்வதேச பிடியாணை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு; பொலிஸ் பாயிஸை ஐந்து செய்ய சர்வதேச பிடியாணை

17 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வழக்கில் தொடர்புடைய லண்டனில் வசிக்கும் பொலிஸ் பாயிஸ் என அழைக்கப்படும் முகமட் பாயிஸைக் கைது செய்வதற்கான பிடியாணைக் கடிதம் நீதிமன்ற அனுமதியுடன் சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தெரிவித்துள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஐந்து படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை திறந்த நீதிமன்றில் பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிள்ளையான் இன்று கல்கிசை நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு விசாரணைக்காக ஆஜராகியுள்ளதால், அவரை காணொளி ஊடாக நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் எழுத்துமூல ஆவணமொன்றைச் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து, குறித்த படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான சாட்சியாளர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், லண்டனில் வசிக்கும் பொலிஸ் பாயிஸ் என அழைக்கப்படும் முகமட் பாயிஸுக்கு எதிராகத் திறந்த பிடியாணையையும் பிறப்பித்தார்.

இதேவேளை, குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கான பிடியாணைக் கடிதம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!
செய்திகள்

கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!

November 23, 2026
சிலாபத்தில் 100 மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர் கைது; பொலிஸ் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

சிலாபத்தில் 100 மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர் கைது; பொலிஸ் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிப்பு!

November 23, 2026
யாழ் கொட்டடி கடற்கரையில் சடலம் மீட்பு
செய்திகள்

யாழ் கொட்டடி கடற்கரையில் சடலம் மீட்பு

November 23, 2026
வடக்கு, கிழக்கு வளர்ச்சியைத் தடுக்கிறதா இலங்கை அரசு?; திருமாவளவன் குற்றச்சாட்டு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு வளர்ச்சியைத் தடுக்கிறதா இலங்கை அரசு?; திருமாவளவன் குற்றச்சாட்டு!

November 23, 2026
பருத்தித்துறையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்; 4 வயது சிறுவன் படுகாயம், பெற்றோரும் காயம்!
செய்திகள்

பருத்தித்துறையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்; 4 வயது சிறுவன் படுகாயம், பெற்றோரும் காயம்!

November 23, 2026
4 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய முன்னாள் வரி அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை!
செய்திகள்

4 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய முன்னாள் வரி அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கடூழியச் சிறை!

November 23, 2026
Next Post
கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!

கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.