Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
LTTE இயக்கத்தை மீளுருவாக்க சதி; மொஹமட் அஸ்மினுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை

LTTE இயக்கத்தை மீளுருவாக்க சதி; மொஹமட் அஸ்மினுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளான ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, என்.ஐ.ஏ (NIA) சிறப்பு நீதிமன்றத்தினால் மன்னிப்பு வழங்கப்பட்டு அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட குறித்த நபரைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது எனத் தெரிவித்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பிணை வழங்கியதோடு மட்டுமன்றி, மனுதாரரான அஸ்மினை ‘கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் கொண்டு வந்து, அவருக்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக வழங்குமாறு மாநில உள்துறைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பெரும் தனிப்பட்ட ஆபத்துகளுக்கு மத்தியில் சாட்சியமளிக்க முன்வரும் நபர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்போது மட்டுமே குற்றவியல் நீதி அமைப்பு திறம்படச் செயல்பட முடியும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி, அவர் ஒரு இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பிணைப் பத்திரத்துடன் இரு நபர் உத்தரவாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன் தனது கடவுச்சீட்டை ஒப்படைத்து, தற்போதைய முகவரி மற்றும் கைபேசி இலக்கத்தை என்.ஐ.ஏ விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்ட எல்லையை விட்டு வெளியேறக் கூடாது எனவும், மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 11 மணி வரை எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ அதிகாரியின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக எவ்வித ஊடகச் சந்திப்புகளையும் நடத்தவோ, பகிரங்க அறிக்கைகளை வெளியிடவோ கூடாது எனவும், ஏனைய சந்தேகநபர்களுடன் எவ்விதத் தொடர்பையும் பேணக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பிணை உத்தரவானது அவருக்கு இந்தியாவில் தங்கியிருப்பதற்கான எவ்வித உரிமையையும் வழங்காது எனத் தெளிவுபடுத்தியுள்ள நீதிமன்றம், வெளிநாட்டவர் பிராந்தியப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அவரைக் குறிப்பிட்ட இடத்தில் தங்க வைக்கவும் முழு சுதந்திரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மொஹமட் அஸ்மின், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவில் இயங்கும் சர்வதேச குற்றக் கும்பல்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கச் சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகவரகம் (NIA) குற்றம் சாட்டியிருந்தது.

சென்னை கடற்கரைப் பகுதிகள் மற்றும் திருச்சி தடுப்பு முகாம்களுக்குள் நடைபெற்ற இரகசியக் கூட்டங்கள் ஊடாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் திட்டங்கள் வகுக்கப்பட்டதாக என்.ஐ.ஏ, நீதிமன்றத்தில் தெரிவித்தது.

300 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின், ஏ.கே-56 ரகத் துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்தே இந்தச் சதித்திட்டம் அம்பலமானது.

இதில் போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதுடன், ‘ஹவாலா’ (Hawala) வழிகள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) ஊடாகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக அஸ்மின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!
செய்திகள்

முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!

November 25, 2026
தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!
செய்திகள்

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
செய்திகள்

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

November 24, 2026
அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்
செய்திகள்

அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்

November 24, 2026
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!
செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

November 24, 2026
பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!
செய்திகள்

பொலிஸ் சீருடை மாற்றம் குறித்து அரசாங்கம் இன்னும் ஆலோசிக்கவில்லை!

November 24, 2026
Next Post
முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!

முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.