Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை தடுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் நேற்று (24) நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னர் இனவாதத்தை ஒழிப்பதாக உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் திருகோணமலையில் இனவாதச் செயற்பாடுகள் தொடர்வதாக அவர் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, அண்மையில் தம்பலகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை மொரவெவ பகுதிக்கு கொண்டு சென்றபோது, பெரும்பான்மை இனத்தவர்களால் விரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளை குறித்த பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், பண்ணையாளர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கால்நடைகளை அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும் என ஜனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவர் எழுத்து மூலமாகவும் கூட்டத்தின் ஊடாகவும் அனுமதி வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் செல்வராசா கஜேந்திரன் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு
காணொளிகள்

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு

November 25, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆஜர்!
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆஜர்!

November 25, 2026
இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம்; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம்; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

November 25, 2026
2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

November 25, 2026
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
செய்திகள்

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

November 25, 2026
கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!
செய்திகள்

கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

November 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு