Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் இலவச சுகாதாரச் சேவையைப் பாதுகாப்பதற்கும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்கும் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான கோரிக்கைகளுக்கு இம்மாதம் 30ஆம் திகதிக்குள் அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அச்சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான வைத்தியர் லசித்த தம்மிக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக வைத்தியர்களின் மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 44 பில்லியன் ரூபா சேமிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்றுநோய்ச் சூழல் காரணமாக அன்றைய அரசாங்கங்களால் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியாத நிலையைப் புரிந்துகொண்டு, வைத்தியர்கள் பொறுமையுடன் செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதாகக் கூறப்படும் சூழலிலும், வைத்தியர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் அதிருப்தி வெளியிட்டார்.

கடந்த நான்கு மாதங்களாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரிடம் இப்பிரச்சினைகளை எடுத்துரைக்க முயற்சித்த போதிலும், பேச்சுவார்த்தைக்கான போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதன் காரணமாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தற்போது விழிப்புணர்வு வாரமொன்றை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மகா சங்கத்தினரைச் சந்தித்து கலந்துரையாடுதல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நோயாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தற்போதைய முயற்சியின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இம்மாதம் 30ஆம் திகதிக்குள் அரசாங்கம் தலையிட்டு கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்காவிட்டால், அவசர மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய வேலைநிறுத்தம் உள்ளிட்ட கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

கடந்த 10ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல், நாடு முழுவதிலுமிருந்து 3,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் சுமார் 25,000 வைத்தியர்கள் பணியாற்றும் நிலையில், மருத்துவச் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தவாறே இத்தனை பேர் போராட்டத்தில் பங்கேற்றமை வைத்தியர்களிடையே நிலவும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலதிக கடமை மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டதால் வைத்தியர்கள் கணிசமான பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, ஆரம்ப நிலை வைத்தியருக்கு மாதாந்தம் 29,948 ரூபாவும், இரண்டாம் நிலை வைத்தியருக்கு 6,329 ரூபாவும், மூன்றாம் நிலை வைத்தியருக்கு 83,804 ரூபாவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நிபுணத்துவ வைத்தியர்களின் சம்பளத்திலும் 1,440 ரூபா குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வைத்தியர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செய்துள்ள இந்தத் தியாகங்களின் ஊடாக அரசாங்கத்துக்கு சுமார் 44 பில்லியன் ரூபா சேமிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதாகக் கூறும் அரசாங்கம் வைத்தியர்களின் நியாயமான உரிமைகளை வழங்குவதில் தாமதிக்கக் கூடாது எனவும் வைத்தியர் லசித்த தம்மிக வலியுறுத்தினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

November 25, 2026
கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!
செய்திகள்

கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

November 25, 2026
மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்
செய்திகள்

மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்

November 25, 2026
மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா
செய்திகள்

மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா

November 25, 2026
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு கட்டுப்பாடு; அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!
செய்திகள்

சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு கட்டுப்பாடு; அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

November 25, 2026
மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!
செய்திகள்

மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!

November 25, 2026
Next Post
2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு