Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திரிபோஷா உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2,000 மெட்ரிக் தொன் சோளம் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்கப் பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான கோப் (COPE) குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தை விடுவிப்பதற்குத் தேவையான அனுமதிகளையும் வசதிகளையும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஏற்படுத்திக் கொடுக்காத காரணத்தினால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சோளத்தை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் 2024ஆம் ஆண்டிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திரிபோஷா நிறுவனம் ஒருநாள் மூடப்பட்டால் சுமார் 1.2 மில்லியன் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கோப் குழுவில் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தை உரிய நேரத்தில் விடுவிக்க முடியாத நிலை காரணமாக கடந்த காலத்தில் திரிபோஷா நிறுவனம் இரண்டு மாதங்கள் வரை மூடப்பட்டிருந்ததாகவும், விவசாய அமைச்சின் அனுமதிகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்களும் உற்பத்தி வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாகவும் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தாக்கமாக, திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 536,000 திரிபோஷா பொதிகள் மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா உற்பத்திக்கான மூலப்பொருட்களை உரிய காலத்தில் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தடைகள், நிறுவனத்தின் உற்பத்திச் செயற்பாடுகளையும் பாதித்துள்ளமை கோப் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
செய்திகள்

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

November 25, 2026
கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!
செய்திகள்

கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

November 25, 2026
மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்
செய்திகள்

மூடநம்பிக்கை மற்றும் சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் தொடர்பில் அரசு அவதானம்

November 25, 2026
மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா
செய்திகள்

மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா

November 25, 2026
சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு கட்டுப்பாடு; அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!
செய்திகள்

சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு கட்டுப்பாடு; அடுத்த ஆண்டு முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

November 25, 2026
மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!
செய்திகள்

மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!

November 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு