Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

1 day ago
in செய்திகள்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மாணவர்களுக்கு சமைக்கப்படாத கோழி இறைச்சி வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட எந்தவொரு பாடசாலையிலும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர், மாணவர்களுக்கு சமைக்கப்படாத கோழி இறைச்சி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உண்மையாக இடம்பெற்றிருந்தால், அதுகுறித்து பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரிடமோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரிடமோ முறைப்பாடுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான எந்தவொரு முறைப்பாடும் தமக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்திகள் வெளியிடுவது ஊடகப் பொறுப்புக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய அவர், நிறுவன ரீதியான விடயங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவரிடம் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வது ஊடக தர்மத்தின் முக்கிய அம்சமாகும் எனவும் தெரிவித்தார்.

எனினும், குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிமனை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வலயக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளியான செய்திகளின் உண்மைத்தன்மையை மீளாய்வு செய்து, உரிய மறுப்பறிக்கையை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த செய்தியை கல்முனை கல்வி வலயத்தின் சிற்றூழியர் ஒருவரே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகப் பிரதானிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
செய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

November 26, 2026
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

November 26, 2026
விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!
செய்திகள்

விளையாட்டு மைதானத்தில் சடலம் மீட்பு; துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்!

November 26, 2026
யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!
செய்திகள்

யாழில் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட அனுமதியற்ற கட்டுமானம்!

November 26, 2026
கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!
செய்திகள்

கெப் வாகனத்திலிருந்து விழுந்த 13 வயது சிறுமி பலி; நோர்வுட்டில் சோகம்!

November 26, 2026
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026
Next Post
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு