Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

வவுணதீவில் கோபு வாள்வெட்டுக் குழுவுக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டம்!

18 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு வாழைக்காலை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரியும் பொதுமக்கள் நேற்று (26) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபு என அழைக்கப்படும் நபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாள்வெட்டுக் குழுவின் செயற்பாடுகளைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த குழுவினரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதற்கமைய, நேற்று காலை 10 மணியளவில் வவுணதீவு வீதி சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள், அங்கிருந்து பேரணியாக வவுணதீவு பொலிஸ் நிலையம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, “கோபுவின் இரத்த வேட்டைக்கு முடிவில்லையா?”, “வாள்வெட்டுக் குழுவை ஒழிக்க வேண்டும்”, “கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வைக் கட்டுப்படுத்து” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, பொலிஸாரிடம் நீதிகோரி கோஷங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தித்து அவர்களின் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கோபு எனக் குறிப்பிடப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்தில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் தமது தரப்பைச் சேர்ந்த மூவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும், சட்ட நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அச்சமின்றி இருக்குமாறும், குறித்த குழுவினரால் ஏதேனும் அச்சுறுத்தல்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தன்னைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த வாள்வெட்டுக் குழுவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரும் மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.

மகஜர் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

November 26, 2026
இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!
செய்திகள்

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் HIV!

November 26, 2026
இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை; 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை; 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு!

November 26, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

November 25, 2026
சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!
உலக செய்திகள்

சீனா உள்ளிட்ட 14 பொருளாதார நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை அறிவித்தது அமெரிக்கா!

November 25, 2026
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!
செய்திகள்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

November 25, 2026
Next Post
இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு