Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!

28 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை, கிண்ணியா அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த எம்.ஈ.எச். மரூப் கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கேட்போர் கூடம் 1994ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் கட்டடம் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையை அடைந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமையவும், கல்வி மற்றும் பொறியியல் துறை அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி குறித்த கட்டடம் இடிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர், மாவட்டப் பொறியியலாளர், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணப் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் பரிந்துரைகள் கிடைத்திருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி அமைச்சின் பொறியியல் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளரின் பரிந்துரையும் இந்த நடவடிக்கைக்குப் பெறப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இடிக்கப்பட்ட கேட்போர் கூடத்திற்குப் பதிலாக தற்போது குறித்த இடத்தில் வகுப்பறைக் கட்டடம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் சபையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், விசாரணைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 26, 2026
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

November 26, 2026
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

November 26, 2026
இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்
செய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

November 26, 2026
அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!
செய்திகள்

அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!

November 26, 2026
யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை
செய்திகள்

யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை

November 26, 2026
Next Post
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு