யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலைப் பேருந்து சேவையில் ஈடுபட்டுவரும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான மருத்துவப் பரிசோதனை இன்று (26) யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித சேனவிரத்னவின் வழிகாட்டலில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதாரப் பிரிவினரால் இந்த மருத்துவப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைப் பேருந்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் உடல்நலத் தகுதியை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







