Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ‘கானி’ (Kaani) புயல், எதிர்வரும் டிசம்பர் 05ஆம் திகதி இரவு திருகோணமலை ஊடாக இலங்கையைக் கடக்கக்கூடும் என வானிலை மாதிரிகள் எதிர்வுகூறியுள்ளன.

மலேசியாவின் பிந்துலு பகுதிக்கு வடக்கே நவம்பர் 25ஆம் திகதி உருவான காற்றுச் சுழற்சி, மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்குத் தெற்காகப் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மத்திய வங்காள விரிகுடாவை அடையும் போது அது புயலாக வலுப்பெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவினால் பரிந்துரைக்கப்பட்ட ‘கானி’ என்ற பெயர் இப்புயலுக்கு வழங்கப்படவுள்ளது.

தற்போதைய கணிப்புகளின்படி, டிசம்பர் 05ஆம் திகதி இரவு திருகோணமலையின் கொட்டியாரக்குடாவுக்கு வடக்கே கரையைக் கடக்கக்கூடிய புயல், பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து வவுனியா ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியின் வழியாக அரபிக்கடலை அடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புயலின் தாக்கம் இலங்கை முழுவதும் உணரப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், இவை தற்போதைய வானிலை மாதிரிகளின் கணிப்புகள் மாத்திரமே என்பதுடன், புயலின் நகர்வுப் பாதையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில மாதிரிகள் புயல் தமிழகக் கரையைக் கடக்கக்கூடும் எனவும் கணித்துள்ளன.

கடந்த ஆண்டு ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்தப் புயல் தொடர்பில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் முன்கூட்டியே அவதானம் செலுத்தி தேவையான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புயலின் பாதை மற்றும் நகர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மேலும், புயல் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!
செய்திகள்

அடித்த தேரருக்கு பிணை அடி வாக்கிய தேரருக்கு பிடியாணை!

November 26, 2026
யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை
செய்திகள்

யாழில் பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடையே மருத்துவப் பரிசோதனை

November 26, 2026
ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது
செய்திகள்

ஈரானில் 2 மாத கர்ப்பிணியான 19 வயது மகளை கொன்ற பெற்றோர் கைது

November 26, 2026
எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்
செய்திகள்

எதிர்வரும் 30ம் திகதி முடங்கப்போகும் அரச பாடசாலைகள்

November 26, 2026
யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
செய்திகள்

யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!

November 26, 2026
டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
செய்திகள்

டுபாயில் தலைமறைவாகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.