Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து வௌியான முக்கிய தகவல்!

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை குறித்து வௌியான முக்கிய தகவல்!

30 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் டிசம்பர் மாத பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை பாரியளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் தற்போது கோழி இறைச்சியின் கையிருப்பு அதிகமாகக் காணப்படுவதால் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான அளவு கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படுவதுடன், சந்தையின் தேவைக்கு ஏற்ப விநியோகத்தை மேற்கொள்ளவும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தையொட்டி கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதனைச் சமாளிப்பதற்குத் தேவையான அளவு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் இருப்பதால் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி குறைவடைந்தமையே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடைத் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோழிப்பண்ணைகளைச் சூழவுள்ள பகுதிகளில் சில வைரஸ் நோய்கள் பரவியமையும், மழைக்கால வானிலை நிலைமைகளும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் ஒரு முட்டை 39 முதல் 40 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் முட்டையின் விலை சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியை கணிசமாக அதிகரிப்பது சவாலான விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கால்நடைத் தீவன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

November 28, 2026
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 1ஆம் திகதி மாபெரும் போராட்டம்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக டிசம்பர் 1ஆம் திகதி மாபெரும் போராட்டம்; தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

November 28, 2026
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!
செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

November 28, 2026
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

November 28, 2026
கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

November 28, 2026
புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!
உலக செய்திகள்

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

November 28, 2026
Next Post
வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

வேனை கடத்திச் சென்ற கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு