இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் ஊடாக 2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 27,581.40 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இந்த வருமான விபரங்களை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, கொட்டாவையிலிருந்து மத்தள வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக குறித்த காலப்பகுதியில் 11,486 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, மீரிகமையிலிருந்து குருநாகல் வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 7,282 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
மேலும், பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்க வரையான அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக 2,560.05 மில்லியன் ரூபாய் வருமானம் பதிவாகியுள்ளது.
இதன்படி, மேற்படி மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளிலிருந்தும் மாத்திரம் மொத்தமாக 21,328.05 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, வெளிச் சுற்றுவட்ட அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக குறித்த காலப்பகுதியில் 6,251 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, 2025 ஜனவரி முதல் 2026 ஒக்டோபர் 31ஆம் திகதி வரையான 22 மாத காலப்பகுதியில் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் மொத்த வருமானம் 27,581.40 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.







