கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் கலுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றின் மீது பாரிய பாறையொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக 35 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







