Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளைய தொழிற்சங்க போராட்டத்திற்கு 48 தொழிற்சங்கங்கள் ஆதரவு; ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

நாளைய தொழிற்சங்க போராட்டத்திற்கு 48 தொழிற்சங்கங்கள் ஆதரவு; ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்

16 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வலியுறுத்தி அரச மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்து உத்தியோகத்தர்களும் நவம்பர் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையை பதிவுசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தெரியப்படுத்துதல்

நிலவும் பாரிய வாழ்க்கைச் செலவு உயர்வாலும் பணவீக்கத்தாலும் தீவிர பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஒட்டுமொத்த அரச அலுவலர்களுக்கும், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் வாயிலாக எவ்வித நியாயமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்பதை அரச மற்றும் மாகாண அரச சேவையின் தொழிற்சங்கங்களாகிய நாம் மிகுந்த மனவேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.

இதற்கமைய, எமது நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கடந்த 2026 நவம்பர் 23ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் அரச நிறுவனங்களில் பல்வேறு சேவைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட போராட்டத் தொடரில் ஈடுபட்டபோதிலும், இதுவரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்பதை அறியத்தருகின்றோம்.
எனவே, பின்வரும் முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, எதிர்வரும் 2026 நவம்பர் 30ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து அரச சேவை தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் சுகவீன விடுமுறையைப் பதிவுசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவையின் தொழிற்சங்கங்களாகிய நாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம் என்பதை இதனால் கனிவுடன் அறியத்தருகின்றோம்.

எமது பிரதான கோரிக்கை

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, அரச மற்றும் மாகாண அரச சேவையில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் 25,000/- ரூபா இடைக்காலக் கொடுப்பனவை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுதல்.
எதிர்வரும் 2026 நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் இப்பிரச்சினைகள் தொடர்பில் அரச மற்றும் மாகாண அரச சேவைத் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி, நியாயமான தீர்வினை வழங்குவதற்குத் தங்களின் கனிவான தலையீட்டை எதிர்பார்க்கின்றோம். தவறும்பட்சத்தில், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

நன்றி
இங்ஙனம்,
உண்மையுள்ள

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள்

  1. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  2. வடமத்திய மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  3. ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம்
  4. ஒன்றிணைந்த ஆயுர்வேத சுகாதார ஊழியர் சங்கம்
  5. ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம்
  6. ஒன்றிணைந்த புகையிரத ஊழியர் சங்கம்
  7. ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம்
  8. ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம்
  9. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் தேசிய கூட்டமைப்பு
  10. முகாமைத்துவ உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம்
  11. ஊவா மாகாண ஐக்கிய சாரதிகள் சங்கம்
  12. மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம்
  13. மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் தேசிய கூட்டமைப்பு
  14. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம்
  15. முற்போக்கு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பட்டதாரிகள் சங்கம்
  16. முற்போக்கு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம்
  17. முற்போக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  18. அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  19. அரச மற்றும் மாகாண அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம்
  20. வடமேல் மாகாண அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம்
  21. பதிவாளர் சேவை உத்தியோகத்தர் சங்கம்
  22. இலங்கை இளநிலை ஊழியர்கள் சங்கம்
  23. இலங்கை இளநிலை ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம்
  24. இலங்கை சுதந்திர புதிய பொது ஊழியர் சங்கம்
  25. இலங்கை முகாமைத்துவ சேவை சங்கம்
  26. இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம்
  27. அபிவிருத்தி கள உத்தியோகத்தர்கள் ஒன்றியம்
  28. அனைத்து இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  29. அனைத்து இலங்கை பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  30. அனைத்து இலங்கை ஐக்கிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  31. அனைத்து இலங்கை அரச முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர் சங்கம்
  32. அனைத்து இலங்கை உள்ளூராட்சி ஊழியர் சங்கம்
  33. அனைத்து இலங்கை உள்ளூராட்சி சாரதிகள் சங்கம்
  34. அனைத்து இலங்கை மாகாண அரச அலுவலக ஊழியர் சேவைகள் சங்கம்
  35. அனைத்து இலங்கை நூலகர் சங்கம்
  36. அனைத்து இலங்கை அரச சாரதிகள் சங்கம்
  37. அனைத்து இலங்கை அரச முகாமைத்துவ உதவி சங்கம்
  38. அனைத்து இலங்கை அரச சேவை அளவீட்டு உதவியாளர் சங்கம்
  39. அனைத்து இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  40. அனைத்து இலங்கை சுகாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  41. சுகாதார ஊழியர் மத்திய நிலையம்
  42. சுயாதீன முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம்
  43. சுயாதீன அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  44. அனைத்து இலங்கை முற்போக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  45. ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு
  46. சமூகச் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  47. கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  48. வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
  49. ஒன்றிணைந்த உள்ளூராட்சி ஊழியர் சங்கம்
  50. ஊவா மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சங்கம்
  51. வடமேல் மாகாண விவசாய திணைக்கள இளநிலை ஊழியர்களின் தொழிற்சங்கம்

பிரதிகள்:

  1. கௌரவ பிரதமர் அவர்கள் – பிரதமர் அலுவலகம், கொழும்பு 03
  2. கௌரவ பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள்
  3. ஆளுநர்கள்
  4. கௌரவ நிதி அமைச்சின் செயலாளர் அவர்கள் – திறைசேரி, கொழும்பு 01
  5. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அவர்கள் – சுதந்திர சதுக்கம், கொழும்பு 07
  6. தொழில் ஆணையாளர் நாயகம் அவர்கள் – தொழில் திணைக்களம், கொழும்பு 05
  7. அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள்
  8. மாகாண பிரதம செயலாளர்கள்
  9. அனைத்து திணைக்களத் தலைவர்கள்
  10. அனைத்து மாவட்ட செயலாளர்கள்
  11. அனைத்து பிரதேச செயலாளர்கள்
  12. அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்கள்
  13. அனைத்து ஊடக நிறுவனத் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள்
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் மாணவன் வேனால் மோதிய சாரதி; பரிசோதனைக்கு சிறுநீர் மாதிரிக்குப் பதிலாகத் தண்ணீர் வழங்கிய சம்பவமும் அம்பலம்!
செய்திகள்

மதுபோதையில் மாணவன் வேனால் மோதிய சாரதி; பரிசோதனைக்கு சிறுநீர் மாதிரிக்குப் பதிலாகத் தண்ணீர் வழங்கிய சம்பவமும் அம்பலம்!

November 29, 2026
மட்டக்களப்பில் இடம்பெற்ற வெவ்வேறு 3 சம்பவங்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற வெவ்வேறு 3 சம்பவங்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

November 29, 2026
போதை லேகியம் உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

போதை லேகியம் உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

November 29, 2026
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை; தேசிய பாதுகாப்புக்காகவே பயன்படுத்துகின்றனர்
செய்திகள்

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணிகளை அபகரிக்கவில்லை; தேசிய பாதுகாப்புக்காகவே பயன்படுத்துகின்றனர்

November 29, 2026
நாளைய வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்காது; தலைவர் அறிவிப்பு!
செய்திகள்

நாளைய வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்காது; தலைவர் அறிவிப்பு!

November 29, 2026
டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!
செய்திகள்

டிசம்பர் 4ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவு; நாளை வழமைபோல் பாடசாலைகள் நடைபெறும்!

November 29, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.