கிராம உத்தியோகத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சட்டப்படி வேலைநிறுத்த நடவடிக்கை இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதுடன், தேர்தல் முடியும் வரை வழமை போன்று கிராம உத்தியோகத்தர்கள் சேவைகளை வழங்குவதாக சங்கத்தின் இணைத் தலைவர் தெரிவித்தார்.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிராம உத்தியோகத்தர் நிபுணத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.