Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுமக்களிடம் ஐந்து வருட கால அவகாசம் கோரியுள்ள ரணில்!

பொதுமக்களிடம் ஐந்து வருட கால அவகாசம் கோரியுள்ள ரணில்!

2 years ago
in அரசியல், செய்திகள்

கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் நேற்று (01) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி மக்கள் இருந்தனர். பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஷபக்ச விலகினார். சஜித் பதவியை ஏற்பார் என்று நாம் நினைத்தோம். முடியாது என சஜித் அறிவித்தார். மறுநாள் சரத் பொன்சேக்காவை பதவி ஏற்கப் போவதாக அறிந்தோம். ஆனால் யாரும் ஏற்கவில்லை. அதன்பின்னர் கோட்டாபய எனக்கு அழைப்பு விடுத்தார். நான் தனியாகச் சென்றேன். பொறுப்பை ஏற்குமாறு இங்குள்ள எம்.பிகள் எனக்கு தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகிய போது என்னை பொறுப்பேற்க வேண்டாம் என்றனர். அனைவரும் தப்பி ஓடினார்கள். அன்று நான் நாட்டைப் பொறுப்பேற்கவில்லையெனில், இன்னுமொரு பங்களாதேஷாக எமது நாடு மாறியிருக்கும். அந்த நிலையில் என்னை ரணில் ராஜபக்‌ச என்று அவர்கள் திட்டினார்கள். இன்று ராஜபக்சவினர் தனியாகச் சென்றுள்ளனர்.

5 வருடங்கள் தான் ஆட்சிப் பொறுப்பைக் கேட்கிறேன். 4 வருடத்தில் அந்தப் பணிகளை நிறைவு செய்வேன். வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் வாழ்க்கைச் செலவு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பது, வரி நிவாரணம் வழங்குவது, அதிகளவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பது, பொருளாதாரத்தை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றுவது,’உறுமய’, ‘அஸ்வெசும’ என்பவற்றை தொடர்வது என்பனவே எனது இலக்குகளாகும் என்றார்.

Tags: Battinaathamnewspoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

July 23, 2026
வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

வடக்கு, கிழக்கு கடற்கரைகளை பாதுகாக்க கடும் உத்தரவு; சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

July 23, 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் மாயம்; தீவிர தேடுதல் நடவடிக்கை!

July 23, 2026
சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!
உலக செய்திகள்

சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; செங்கடலில் பதற்றம் தீவிரம்!

July 23, 2026
இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
Next Post
பணப்பையை ஒப்படைக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல்; இராணுவத்தினர் 8 பேர் கைது!

பணப்பையை ஒப்படைக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல்; இராணுவத்தினர் 8 பேர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு