Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரவூப் ஹ‌க்கீம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி; ஸ்ரீல‌ங்கா உல‌மாக்கட்சி தெரிவிப்பு!

ரவூப் ஹ‌க்கீம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி; ஸ்ரீல‌ங்கா உல‌மாக்கட்சி தெரிவிப்பு!

9 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்க வேண்டுமென ஸ்ரீல‌ங்கா உல‌மாக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடர்பில் சமகால அரசியல் தொடர்பாக ஸ்ரீல‌ங்கா உல‌மாக்க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியறிக்கையில்,

ரவூப் ஹ‌க்கீம் முஸ்லிம் ச‌மூக‌த்தின் துரோகி என 2001 முத‌ல் ப‌கிர‌ங்க‌மாக‌ச் சொல்லி வ‌ருகிறேன். 2001ல் அதாவுள்ளாவும் ஹ‌க்கீமுட‌ன் தான் இருந்தார்.

அப்போதெல்லாம் எங்களைத்தூற்றிய‌ பழைய‌, புதிய முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இப்போது ஹ‌க்கீமைத் தூற்றுகிறார்க‌ள். எனினும், உண்மை மிக‌த் தாம‌த‌மாக‌த்தான் புரிய‌ வ‌ரும்.

அது போன்று தான் முஸ்லிம் காங்கிர‌ஸ் போன்ற‌ திருட்டுக்க‌ட்சிக்கார‌ர்க‌ளை சேர்க்க‌மாட்டோம் என‌ ஜே.வி.பி அநுர‌குமார‌ பேசி வ‌ந்தார்.

ஆனால், இப்போது அதாவுல்லாவின் க‌ட்சியில் மாகாண‌ ச‌பை உறுப்பின‌ராக‌ இருந்து பின்ன‌ர் முஸ்லிம் காங்கிர‌ஸ் கட்சியில் சேர்ந்து அத‌ன் த‌லைமை நிர்வாக‌த்திலிருந்த‌ ஒருவ‌ரை தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தி த‌ன்னோடு இணைத்துக் கொண்டுள்ள‌தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவ்வாறாயின், ஏமாற்றுக்க‌ட்சியிலிருந்து கொண்டு ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை விற்று சுக‌போக‌ம் அனுப‌வித்த‌ க‌ட்சியின் அனைத்துச் செய‌ல்க‌ளுக்கும் துணை போய் விட்டு இப்போது க‌ட்சி மாறினால் ந‌ல்ல‌வ‌ரா?
இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தியில் இணைப்பதன் மூல‌ம் தற்போது அநுர‌குமார‌ த‌ன் கொள்கையிலிருந்து வில‌கி திருட‌ர்க‌ளை இணைக்காம‌ல் வெற்றியைப்பெற‌ முடியாதென்ற‌ நிலைக்கு வ‌ந்துள்ளாரா? என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

இது தவிர, இதைத்தான் நாம் சொல்கிறோம் மாற்ற‌மென்ப‌து ஆட்க‌ளை மாற்றுவ‌தால் ஏற்ப‌டாது. ந‌ல்ல‌ அர‌சிய‌லை உருவாக்கும் ம‌ன‌ மாற்ற‌ம் ம‌க்க‌ள் ம‌ன‌திலும் அர‌சிய‌ல்வாதிக‌ள் உள்ள‌த்திலும் வ‌ர‌ வேண்டும். பாத்திர‌ங்க‌ள் வேறு, க‌ள்ளு ஒன்று தான்.என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ம‌ஹிந்த‌ ராஜபக்சவின் க‌ட்சியின் செய‌லாள‌ராக‌ இருந்த‌ மைத்திரி பெல்டி அடித்த‌தும் அவ‌ர் ந‌ல்ல‌வ‌ராகி விட‌மாட்டார் என‌ அப்போதே சொன்ன‌ ஒரேயொரு முஸ்லிம் க‌ட்சி உல‌மா க‌ட்சியாகும்.

ஆனால், இல்லையில்லை என‌ முஸ்லிம் ச‌மூக‌ம் ம‌றுத்து செத்துப்போன‌வ‌னும் வ‌ந்து மைத்திரிக்கு ஓட்டுப்போட்டான். க‌டைசியில் ம‌ஹிந்த‌ ஆட்சியை விட‌ மோச‌மான‌து ஹ‌க்கீம், ரிசாத், த‌மிழ் கூட்ட‌மைப்பு முட்டுக்கொடுத்த‌ மைத்திரி ஆட்சி என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

மேலும், ஒரு க‌ட்சியிலிருந்து சுக‌ போக‌ம் அனுப‌வித்து விட்டு ச‌ந்த‌ர்ப்ப‌த்துக்கு க‌ட்சி மாறுப‌வ‌ன் நிச்ச‌ய‌ம் பெரும் மோச‌டிக்கார‌ன். இப்ப‌டியான‌ இன்னும் ப‌ல மோச‌டிக்கார‌ர்க‌ள் தேசிய‌ ம‌க்க‌ள் ச‌க்தியில் (ஜேவிபி) இணைந்தால் மீண்டும் மைத்திரி ஆட்சி போல் திருட்டு ஆட்சியே ஏற்ப‌டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectionpoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிகரெட்டுகளுக்காக நாள் ஒன்றுக்கு 520 மில்லியன் செலவிடும் இலங்கையர்கள்
செய்திகள்

சிகரெட்டுகளுக்காக நாள் ஒன்றுக்கு 520 மில்லியன் செலவிடும் இலங்கையர்கள்

May 29, 2025
299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்
உலக செய்திகள்

299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்

May 29, 2025
கொழும்பில் கஜ முத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது
செய்திகள்

கொழும்பில் கஜ முத்துடன் இரு சந்தேக நபர்கள் கைது

May 29, 2025
புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை
செய்திகள்

புதிய கொரோனா திரிபால் மருத்துவமனைகளில் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை

May 29, 2025
“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்
செய்திகள்

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம்

May 29, 2025
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தாயும் மகனும் கைது
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த தாயும் மகனும் கைது

May 29, 2025
Next Post
“சூடு சுரணையுள்ள தமிழன் அரியநேந்திரனுக்கே வாக்களிப்பான்”; வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு!

"சூடு சுரணையுள்ள தமிழன் அரியநேந்திரனுக்கே வாக்களிப்பான்"; வர்ணகுலசிங்கம் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.