பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுவர்களை உடல் ரீதியாக தாவறான முறைக்குட்படுத்தினார் என்ற 08 குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா – குறொய்டன் பகுதியை சேர்ந்த 51 வயதான ஜேக்கப் தனுகரன் எனும் நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிறுவர்களை உடல் ரீதியாக தாவறானமுறைக்குட்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.