நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப் படையினருடன் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரும் இணைந்து நேற்று (24) மாலை நடத்தப்பட்ட சோதனையின்போதே இம்மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








