கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோர் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது தனது அன்புக்குரியவர்களுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான மக்காச்சோள விதைகளை வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (04) காலை எஸ்.எம். சந்திரசேன முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








