Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவு

ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னத்தில் சபை மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்றது. இதன்போது புதிய தவிசாளருக்கான முன்மொழிவினை உள்ளூராட்சி ஆணையாளர் கோரினார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனைப்பற்று பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் முன்மொழியப்பட்டார். தவிசாளருக்கான வேறு தெரிவுகள் இன்மையால் ஏகமனதாக மண்முனைப்பற்றின் தவிசாளாராக கா.செந்தில்குமார் தெரிவுசெய்ப்பட்டார்.

பிரதேச சபையின் உப தவிசாளருக்கான பதவியானது தற்போது வறிதாக்கப்பட்டுள்ளமையினால், மீண்டும் குறித்த பதவிக்கான வெற்றிடத்தினை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு தெரிவுசெய்யப்படும் என உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

முன்னர் தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர் த.மாணிக்கராஜா அண்மையில் காலமாகியதன் காரணமாக இந்த புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தவிசாளர் தெரிவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் பாராளுமன்றத்தில் எனக்கும் ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ்க்கும் ஏற்பட்ட முக்கியமான விவாதத்தின் பின்னர் ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு எவ்வாறு அமையப்போகின்றது என எதிர்பார்த்திருந்தனர்.

இருப்பினும், கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களின் நன்மைகருதி நான் சாணக்கியமாக முஸ்லிம் காங்கிரசுடன் குறித்த தெரிவில் நடந்துகொண்டதுடன், எதிர்காலத்திலும் கிழக்கு மாகாணத்தில் சிறப்பான புரிந்துணர்வுடன் கூடிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
செய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

November 9, 2026
இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்
செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

November 9, 2026
ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!
செய்திகள்

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

November 9, 2026
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!
செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!

November 9, 2026
செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!

November 9, 2026
Next Post
மட்டு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்; ரவூப் ஹக்கீம்

மட்டு மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்; ரவூப் ஹக்கீம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு