உலகின் மிகவும் அச்சுறுத்தலான சைபர் வலைத்தளம் என்ற சைட் வெண்டரினால் இலங்கைக்கு ஆபத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாட்டின் உட்கட்டமைப்பு, இராணுவ உளவுத்துறை மற்றும் பிற அச்சுறுத்தல் குழுக்கள் போன்றவற்றை சைட்வெண்டர், இலக்கு வைக்கும் என காஸ்பர்ஸ்கியா எச்சரித்துள்ளது.

சைட் வெண்டர் குழுவின் இலக்குகளில் இலங்கையுடன், பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம், சீனா, இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், மியான்மர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் உள்ளடங்குகின்றன.
முன்னதாக, இந்தக் குழு தெற்காசியாவில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி வசதிகள் மீதும் தனது சைபர் தாக்குதல் இலக்குகளைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








