Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

நல்லூர் உற்சவங்களில் 600 பொலிஸார் கடமையில்; திருடர்களின் புகைப்படங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நல்லூர் ஆலய விசேட உற்சவங்களில் 600 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏபிஎஸ் ஜெயமகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் வாரம் நல்லூர் ஆலயத்தில் தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா உள்ளிட்ட விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளதால் பெருமளவான பக்தர்கள் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் திருட்டுக்களை தடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து விசேட பொலிஸ் அணியினர் நல்லூர் ஆலய பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய சிவில் மற்றும் சீருடையில் சுமார் 600 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு தென்பகுதி மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து திருட்டுடன் தொடர்புடைய பல்வேறு சந்தேக நபர்களை இனங்காணக்கூடிய பொலிஸ் அணியொன்றும் நல்லூர் ஆலய உற்சவத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களும் தொடர்புடையவர்கள் தொடர்பிலான புகைப்படங்களையும் ஆலய நுழைவாயில்களில் காட்சிப்படுத்தவுள்ளனர்.

புகைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டவர்கள் யாராவது ஆலய வளாகத்தில் இனம் காணப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் விரைவில் அவர்களைக் கைது செய்யக் கூடியதாக இருக்கும்.

எனவே பொலிஸாரால் பல்வேறுபட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

மடுமாதா தேவாலய வருடாந்திர திருவிழா இன்று ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு