Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு இரத்து

11 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிட டெல்லி பல்கலைக்கழகத்திற்கு இடப்பட்ட உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.

இந்திய பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலைப் பட்டமும், குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த கடந்த 2016-ம் ஆண்டு ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித்தகுதி குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின்பட்டப்படிப்பு சான்றிதழ்களை செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதனிடையே ஆம் ஆத்மி நிர்வாகி நீரஜ் சர்மா ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் 1978ல் பெற்ற பிஏ கல்வி சான்றிதழை வழங்க கோரி டெல்லி பல்கலைக்கழகத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்படவே மத்திய தகவல் ஆணையத்தில் நீரஜ் சர்மா முறையிட்டார். இதனையடுத்து பிரதமர் மோடியின் பிஏ கல்வி சான்றிதழை வழங்க டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க தயார் என்றும், ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக ஆவணங்களை வழங்க முடியாது என டெல்லி பல்கலைக்கழகம் கூறியிருந்தது. மேலும் தகவல் அறியும் உரிமையை விட ஒரு தனிப்பட்ட நபரின் ஆவணங்களின் உரிமை உயர்வானது என்றதோடு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனிப்பட்ட விவரங்களை யாரும் கேட்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விரிவாக நடைபெற்று வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சச்சின் தத்தா இன்று (26) தீர்பை வழங்கினார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை இரத்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.