பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜராகியதை தொடர்ந்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை கைதுசெய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்ததால் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜராகியதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








