Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தம்பிலுவில் கோவலன் ஆலயம்; மழை வேண்டி கொம்புமுறி விளையாட்டு முன்னெடுப்பு

தம்பிலுவில் கோவலன் ஆலயம்; மழை வேண்டி கொம்புமுறி விளையாட்டு முன்னெடுப்பு

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

அம்பாறை – தம்பிலுவில் பிரதேசத்தில் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான கொம்பு முறி விளையாட்டுக்கான கோவலன் ஆலயத்தில் 8 நாட்கள் இடம்பெறும் விசேட பூஜையின் 5 வது பூஜை நேற்று (02) செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கோவலன் என்ற பெயரில் தனி ஆலயம்  தம்பிலுவில் பிரதேசத்தில் இருப்பினும், சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலன் மற்றும் அவன் மனைவி கண்ணகியின் நினைவாக, கண்ணகி அம்மன் கோயில்களும், கோவலன் கண்ணகி தொடர்பான பல இடங்களும் உள்ளன. 

மதுரை கோவலன் பொட்டல் மற்றும் தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம் போன்றவை கண்ணகி-கோவலன் கதையுடன் கோவலன், கண்ணகியுடன் வந்து தங்கியிருந்த இடமாக கருதப்படும் ஒரு புனிதத் தலமாகும். இங்கு கண்ணகி சிலையும், கோவலன் தொடர்பான தொடர்புடைய கதைகள் உள்ளன.

கோவலன் இறந்த பிறகு, மக்கள் மத்தியில் கோவலன் கூத்து என்ற நாட்டுப்புறக் கலை வடிவம் இன்றுவரை இடம்பெற்று வருகிறது என்பது அறிந்தவிடையம்.

இதேவேளை தம்பிலுவில் மக்கள் கடும் வரட்சியிலிருந்து நாட்டை பாதுகாத்து மழை பெய்ய வேண்டும் என்றும், நாடு செழிக்க வேண்டும் என்றும் துன்பங்கள் ஒழிய வேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டி வருடம் தோறும் தம்பிலுவில் மக்கள் இந்த வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 8 நாட்கள் வடசேரி, தென்சேரி குடிகளினால் விளையாட்டு இடம்பெறுவது வழக்கமாகும்.

கொம்புமுறி விளையாட்டு, கிழக்கிலங்கையின் ஏனைய பகுதிகளிலும் முற்றாக அருகிப்போய், கொம்புமுறிப்பு என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையாக கடந்து போகின்றது.

பிரதேசத்தில், அம்மன் கோயில் சடங்கு, திருக்கோவில் தீர்த்தம், கதிர்காமப் பாதயாத்திரை ஆகிய மூன்று பருவகாலங்களும், சிறியவர் முதல் பெரியவர் வரை, எத்தகைய குதூகலத்தை ஏற்படுத்துகிறதோ, அதே குதூகலத்தை ஏற்படுத்தும் காலவேளையாக, ஒருகாலத்தில் கொம்புமுறிப்பும் விளங்கி இருந்திருக்கின்றது.

இந்த நிலையில் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வீதியில் மழை வேண்டி முன்னெடுக்கும் கொம்புமுறி விளையாட்டு வழிபாடு கண்ணகி அம்மனை முன்னுரித்தி மேற்கொள்ளப்படுகிறது.

அம்மை கொப்பளிப்பான், கண்நோய் போன்ற நோய்களை அம்மன் கோதாரி என்று அழைப்பது தம்பிலுவில் பிரதேச வழக்கம். அதிகமாக இக்காலத்தில் இந்த நோய்கள் அதிகம் பரவுவதாலும் மஞ்சளும் வேப்பிலையாலும் கண்ணகி அம்மனுக்கு விழா நடத்தினால் அம்மன் மகிழ்ச்சி உற்று மழை பொழியும் எனவும் நோய்கள் குறையும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

கண்ணகி அம்மன் காவியம் பாடி இந்த வழிபாட்டை காலம் காலமாக இந்த மக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
Next Post
செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்

செம்மணி மனிதபுதைகுழி விசாரணையில் பொலிஸ் மற்றும் இராணுவம் தலையிட வேண்டாம்; மனித உரிமைகள் ஆணையகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு