Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வியத்புர வீட்டு சலுகை இரத்து

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீட்டுத்தொகுதியில் 101 வீட்டு அலகுகளை ஒரு வருட வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு 2022.07.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதற்கமைய, 15.5 மில்லியன் குறைந்தபட்ச விலை மற்றும் 22 மில்லியன் உயர்ந்தபட்ச் விலைக்கு சாதாரண மக்களுக்கு விற்பனை செய்கின்ற வீட்டு அலகொன்றை, 13.34 குறைந்தபட்ச விலை மற்றும் 18.21 மில்லியன் அதிகபட்ச விலைக்கும் குறைத்து சலுகை முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கும், விற்பனை விலையில் 25% சதவீதத்தை ஆரம்பக் கட்டணமாக அறவிட்டு, எஞ்சிய தொகையை 15 வருடங்களில் 10% ஆண்டுக்கான வட்டி வீதத்தின் கீழ் அவர்களிடமிருந்து அறவிடுவதற்கும், 2024.07.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைமையின் கீழ் வீட்டு அலகைக் கொள்வனவு செய்வதற்காக 29 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2024.12.31 அன்று வரை விற்பனை விலையின் 25% சதவீதத்தை வைப்பிலிட்டுள்ளனர். ஆயினும், இச்சலுகை முறையால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 92.126 மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், செலவை ஈடுசெய்வதற்கு இயலாமல் போயுள்ளது.

அதனால், மேற்குறிப்பிட்டவாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சலுகை முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கும், குறித்த 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவிப்பின் சாதாரண மக்களுக்கு குறித்த வீட்டு அலகைக் கொள்வனவு செய்யும் முறை மற்றும் விலைக்கமைய அவர்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு