Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

மட்டு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகல் ஆலயத்திற்கான ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரையானது வெள்ளிக்கிழமை (05) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரையில் இருநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நந்திக்கொடி ஏந்தியவாறு தங்கள் வேண்டுதலை வேண்டி அரோகரா கோசத்துடன் சென்றனர்.

குறித்த ஆன்மீக பாதயாத்திரையானது 05ம் திகதி வெள்ளிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி எதிர்வரும் 11ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையவுள்ளதுடன், மண்டூர் கந்தசுவாமி ஆலய் தொடக்கம் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயம் வரையான பிரதான வீதிகளில் உள்ள ஆலயங்களுக்கு கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு செல்வார்கள்.

இப்பாதயாத்திரையின் போது வெள்ளிக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை இரவு கிரான்குளம் கணபதிப் பிள்ளையார் ஆலயத்தை சென்றடையும். பின்னர் சனிக்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினை சென்றடைந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பின்னர் இரவு வந்தாறுமூலை விஷ்ணு ஆலயத்தினை சென்றடையும்.

திங்கட்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தை சென்றடையும். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு வாகரை மாங்கேணி செல்வ விநாயகர் ஆலயத்தை சென்றடையும்.

செவ்வாய்க்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இரவு வாகரை சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடையும். பின்னர் புதன்கிழமை காலை குறித்த ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பகல் கதிரவெளி பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து, பிற்பகல் வேளை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை சென்றடையும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் அடியார்களுக்கு உணவு வசதிகள், ஆலயங்களில் தங்குமிட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், யாத்திரையில் கலந்து கொள்ளும் அடியார்கள் தங்கள் பகுதி ஆலயங்களுக்கு வருகை போதும் அவ்விடத்திலும் இருந்து இணைந்து கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்
செய்திகள்

மட்டு மாங்கேணியில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் திலீபனுக்கு நினைவேந்தல்

September 24, 2026
இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!
உலக செய்திகள்

இந்தியா, சீனா, துருக்கி ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தினால் போர் ஒரு வாரம் கூட நீடிக்காது; செலென்ஸ்கி!

September 24, 2026
ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி
உலக செய்திகள்

ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்துகின்றன; அராக்சி

September 24, 2026
ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!
செய்திகள்

ஐந்து பேர் கொண்ட குடும்பப் பயணத்திற்கு கூடுதல் சீட் பெல்ட் பொருத்தலாம்; போக்குவரத்து அமைச்சர்!

September 24, 2026
Next Post
மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும்; அமைச்சர் மகிந்த ஜயசிங்க

மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்படும்; அமைச்சர் மகிந்த ஜயசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு