Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்; சபையில் சிறீதரன்

புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார்; சபையில் சிறீதரன்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லிம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (12) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இதுவரையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு தாயகம் என்ற ஒன்று இருப்பதை வெளிப்படையாக கூறியதில்லை.

குறிப்பாக சபையில் சில முஸ்லிம் தலைவர்கள் பேசும்போது கூட குரோதமான விடயங்கள் வெளிப்படுத்துவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகிறது.

நாட்டில் விடுதலைப்புலிகளின் போராட்டம் இடம்பெற்ற காலத்தில் 2001 ஆம் ஆண்டு தொடர்க்கம் 2006ஆம் ஆண்டுவரை சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பொழுது, அதன் அங்கமாக அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் அதில் இணைந்திருந்தார்.

அவர் கிளிநொச்சிக்கு வருகைத்தந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனை சந்தித்திருந்தார்.

இதன்போது, தனியான சமையல் காரரை அழைத்துவந்து பிரபாகரன், உரிய சமையலை செய்து வழங்கியிருந்தார்.

இந்த பின்னணியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனாக இருக்கட்டும், முத்த தலைவர் தந்தை செல்வா முதல் – இரா சம்பந்தன் வரை முஸ்லீம் மக்கள் தொடர்பில் மிக தெளிவான எண்ணங்களை தமிழர்கள் கொண்டுள்ளனர்.

மேலும் பெரும் விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம்களுக்காக தமிழ் மக்கள் செய்திருந்தனர்.

எனினும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, ஒரு நிகழ்வில் சில விடயங்களை கூறியிருந்தார்.

அதில் குறிப்பாக அம்பாறையில் உள்ள இந்துக்கோவிலை உடைத்ததாகவும், ஆயுதங்களை வாங்கி ஊர்காவற்படைக்கு வழங்கினேன் எனவும், ஜிகாத் என்ற அமைப்பை உருவாக்கினேன் என்றெல்லாம் வெளிப்படையாக பேசியிருந்தார். அப்படி இருந்தும் முஸ்லிம் சகோதரர்கள் மீது எவ்வித கோபங்களும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.

காரணம் யுத்த காலத்தில் இரு பக்கங்களுக்கும் நிறைந்த காயங்கள் உள்ளன. யாழிலும் கூட விடுதலைப்புலிகள் போராட்டத்தில் முஸ்லிம் சகோதரர்கள் போராடி மரணித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் விடுதலைப் புலிகளிளோடு இணைந்து முஸ்லிம்களும் போராடியிருக்கின்றார். வீரச்சாவடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறு உள்ள பின்னணியில் தற்போது சில முஸ்லிம் சகோதரர்கள் விரோத போக்கை கொண்டு செயல்படுகின்றனர்” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்   பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு கணக்குகளுக்கு ரூ.24.8 பில்லியன்  பணப் பரிமாற்றம்; ஒருவர் கைது!

September 23, 2026
வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
Next Post
இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

இலத்திரனியல் நீதிமன்ற கருத்திட்டத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.