Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

ரஷ்யாவிடமிருந்து நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்கக்கூடாது; போரை நிறுத்த டிரம்பின் யோசனை

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சமாதான முயற்சிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் டிரம்ப், அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

”அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, ரஷ்ய பெட்ரோலியத்தை வாங்கும் சீனாவிற்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதித்தால், ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு “100% க்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷ்யா மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இந்தியாவிற்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக நேட்டோ உறுப்பினர் துருக்கி இருந்து வருகிறது. மேலும் நேட்டோ அமைப்பில் உள்ள ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
ஜனாதிபதியின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு வாக்களிப்பதை தட்டிக்கழித்த தமிழரசுக்கட்சி

ஜனாதிபதியின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்திற்கு வாக்களிப்பதை தட்டிக்கழித்த தமிழரசுக்கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு