ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க தொழிலாளர் அமைப்பு, செப்டம்பர் மாதம் 22 முதல் 26 வரை ஒரு விசேட தொலைபேசி சேவைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள, தொழிலாளர் அமைப்புக்கள் மாவட்ட மற்றும் பிரதி அலுவலகங்களில் இதன்மூலம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது,
மேலும் அவை பின்வருமாறு சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர் சேமலாப நிதிய இருப்பு மற்றும் கணக்கு விசாரணைகள்,
தேசிய அடையாள அட்டை அடிப்படையில் உறுப்பினர் விவரங்களைத் திருத்துதல்,
உறுப்பினர் பதிவு,முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளல், தொழிலாளர் சட்டம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குதல்
தொழிலாளர் சேமலாப நிதிய உறுப்பினர்கள் தங்கள் பி-கார்டைக் கொண்டு வரவும், உறுப்பினர் விவரங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டால், அவர்களின் முதலாளியிடமிருந்து ஒரு கடிதத்தையும் கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்.








