Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு விரைவில் எட்டப்பட்டதும் தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்; கந்தசாமி பிரபு

9 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற நடவடிக்கையை தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள் முன் எடுத்து வருகின்றனர் எனவே இந்த வங்குரோத்து அரசியல் செய்துவரும் வடக்கு கிழக்கை பிரதிநிதி படுத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகள் வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும். என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு புதூர் பகுதிகளில் இடம்பெற இருக்கும் வீதி அபிவிருத்தி தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (19) நேரில் சென்று வீதிகளை பார்வையிடும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை பொறுப்போற்றதன் பின்னர் மிகவும் நேர்த்தியாகவும் நீதியான முறையில் சட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கமாக தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

அபிவிருத்தி திட்டங்களுக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களை கொண்டு நாங்கள் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதற்கான முன் மீளாய்வு செயற்பாடுகளை செய்வது இருக்கிறோம்.

தற்போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கை முன் எடுத்து வருகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கை பிரதி நிதிப்படுத்துகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக ஒரு சில விடையங்களை மாத்திரம் கூறிக் கொண்டு தங்களது வங்குரோத்து அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

விசேடமாக காணாமல் ஆக்கப்பட்டோர் விடையங்களில் கரிசனை செலுத்துவதாகவும் யுத்த காலங்களில் இடம்பெற்ற விடயங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என ஐ.நா. விடம் வலியுறுத்தி வருவதாக மக்களை திசை திருப்புகிற குழப்புகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இருந்த போதும் நாங்கள் இந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக இந்த விடயங்களை தீர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதேவேளை அதற்கு தேவையான சர்வதேச ரீதியான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு அந்த விசாரணைகளை நேர்த்தியான முறையில் மேற்கொண்டு வருகிறோம்.

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு பொறிமுறையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக தீர்வை வெகுவிரைவில் எட்டிக் கொள்வோம். எங்களது ஜனாதிபதி தனது கொள்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவோம் என குறிப்பிட்டிருந்தார். அதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளை நாங்கள் படிப்படியாக செய்து வருகிறோம்.

அரசியல் அமைப்பு தொடர்பான விடயம், மாகாணசபை தேர்தல் தொடர்பான விடயம் உட்பட அனைத்தையும் செயற்படுத்த நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். அதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது அதை வெகுவிரைவில் தீர்த்துக் கொள்வோம்

அதன் பின்னர் இந்த வங்குரோத்து தமிழ் அரசியல் வாதிகள் வங்குரோத்து அரசியல் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படும் ஆகவே தங்களது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்கள் ஆங்காங்கே மேற்கொள்கின்ற விடயங்கள் தமிழ் மக்கள் மத்தியில் விமர்சனமாக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதத்தை நீக்குகின்ற பிரேரணைக்கு அவர்கள் கலந்து கொள்ளாது பின்வாங்கினர். இது மக்களுக்கு மிகத் தெளிவாக விளங்கியுள்ளது. இவர்கள் எங்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் அவர்களது இருப்பை காப்பாற்றுவதற்கு தொடர்ச்சியாக பொய்கூறிவருகின்றதாக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே இந்த வங்குரோத்து அரசியல் இல்லாமல் செய்யப்படும்.

முன்னாள் ஜனாதிபதி இரா.சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருந்தார். இந்த நிதியில் எருவில் பிரதேசத்திலே விளையாட்டு மைதானம் ஒரு தாழ்வு பகுதியில் குளம் போன்ற பிரதேசத்தில் அந்த மைதானத்தை அமைத்து இருக்கின்றனர்.

ஆனால் அந்த மைதானம் அமைக்கப்பட்ட இடம் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிதி தொடர்பாகவும் அதனை கையாண்ட விதம் தொடர்பாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. அதை நாங்கள் நேரடியாக சென்று பார்க்கும் போது அது குளம் போல் காட்சி அளித்தது. இது தொடர்பாக பகுப்பாய்வு நடவடிக்கைகளையும் நிதியை கையாண்ட விடயம் தொடர்பாகவும் விசாரணை முன்னெடுத்து வருகிறோம்.

அதேவேளை செம்மணி மற்றும் குருக்கள்மடம் புதைகுழிகள் தொடர்பான ஆய்வுகளுக்கு தேவையான சர்வதேச ரீதியான உதவிகளும் சரி அதற்கான தேவையான நிதிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக எங்கள் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்குரிய வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய அதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கின்றனர். அதற்கான தொழில்நுட்ப விடயங்களுக்கு சட்டரீதியாக ஒத்துழைப்புக்களை வழங்கி கொண்டிருக்கின்றோம். எனவே இலங்கையில் இருக்கின்ற புதைகுழி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம். எனவே மக்கள் மத்தியில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி சட்டரீதியாக நீதியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள செயற்படுத்த உதவிபுரிந்து வருகிறது. என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
நாமல் ராஜபக்சவே எதிர்காலத் தலைவர்; ரோஹித வலியுறுத்தல்

நாமல் ராஜபக்சவே எதிர்காலத் தலைவர்; ரோஹித வலியுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.