Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலம்; அமைச்சரவை அங்கீகாரம்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் நுண்நிதித் தொழிற்றுறைக்கு விரிவான ஒழுங்குபடுத்தல் சட்டகமொன்றை உருவாக்குவதற்காக 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகள் போதுமானமாக இன்மையால், புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் அரச வர்த்தமானியில் வெளியிட்ட பின்னர், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர்களால் உயர்நீதிமன்றில் 07 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மற்றும் பாராளுமன்றத்தின் ‘பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை சீர்செய்வதற்கான துறைசார் மேற்பார்வை செயற்குழுவால்’ வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, புதிய சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும், மத்திய வங்கியும் கவனம் செலுத்தியுள்ளன.

அதற்கமைய, புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2025.08.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த புதிய நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இந்தவாரம் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பின்வருமாறு,

Cabinet Decisions on 22.09.2025 (T)Download
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்

மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு