Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் புற்றுநோய் மருந்து தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘புற்றுநோய்க்கான மருந்து’ குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை தெரிவித்துள்ளது.

இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த நம்பகமான ஆதாரங்கள் இல்லாதது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்து ‘ஊட்டச்சத்து உணவுப் பொருள்’ (Nutraceutical) என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விளம்பர அணுகுமுறை “மிகவும் தவறாக வழிநடத்துகிறது; புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிப்பூர்வ பலவீனங்களைச் சுரண்டுகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரமற்ற சிகிச்சைகள் உயர்தர சிகிச்சைகளைத் தாமதப்படுத்தி, நிதி இழப்பை ஏற்படுத்தி, அறிவியல் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் என்பதால், இந்த விவகாரம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல்கலைக்கழகம் தனது நிலையை பொதுவெளியில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இலங்கை புற்றுநோயியல் கல்லூரி வலியுறுத்தியுள்ளது.

இந்த மருந்தின் விளம்பரம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்துடன் (Breast Cancer Awareness Month) ஒத்துப்போவது, புற்றுநோயியல் கல்லூரியின் விழிப்புணர்வு முயற்சிகளை மூலதனமாக்கும் முயற்சி என்றும் இலங்கை புற்றுநோயியல் கல்லூரி கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்;  இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டு தாக்குதல் சம்பவம்; இருவர் கைது!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; 7 பேர் காயம்

September 26, 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய வானிலை!

September 26, 2026
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!
செய்திகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ராமர் பாலத்துடன் தொடர்புடைய 3வது மணல் திட்டை நோக்கி பயணம்!

September 25, 2026
“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!
உலக செய்திகள்

“ஹோர்முஸ் பாதுகாக்க ஈரானுடன் மோத தயார் பிரான்ஸ் அதிரடி!

September 25, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றம்!

September 25, 2026
Next Post
பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

பிமல் ரத்நாயக்கவின் ஊடக செயலாளர் இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு